Contact US

Zajil Media Network (Pvt) Ltd.
Kattankudy – Sri Lanka.

+94 772345611

+94 771677663

Email: info@zajilnews.lk

 

இணையத்தளம் என்பது இன்றைய நாகரீக உலகத்தில் மனிதனின் மிகவும் அவசியத் தேவையாகிவிட்டது. இக்காலத்தில் இணையத்தளம் என்பது முழு உலகையுமே நமது கண்முன் எடுத்துக் கொண்டு வருகிறது.

இப்படியான ஒரு நிலையில் இலங்கையிலும் முழு உலகிலும் அதிகளவிலான தமிழ் இணையத்தளங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

இதே நேரம் நமது தாய் மண்ணாகிய இலங்கையிலிருந்து அன்றாடம் நடைபெறும் விடயங்கள், நல்ல பல கட்டுரைகள், தகவல்கள் குறை நிறைகளின் உண்மைத் தன்மைகள் போன்றவைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இணையம் ஊடாக கொண்டு செல்வதற்காக எமது குழுவினால் இத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ் இணைய சேவையின் பெயர் www.zajilnews.lk.

zajil என்பது ஒரு தனி நபரின் பெயர் அல்ல பழங்கால மக்கள் செய்தி பரிமாற்றத்துக்கு ஒரு துண்டில் தகவலை எழுதி புறாக்களின் காலில் கட்டி பறக்கவிட்டார்கள். இச் சேவைக்கு அரபி மொழியில் zajil என்று கூறினார்கள் ஆக எமது சேவையும் செய்தி பரிமாற்றம் என்பதால் எமது குழு இச் சேவைக்கு zajil என்கிற பெயரைச் சூட்டியது.

எமது சேவையில் zajil fm எனும் முற்றிலும் குர்ஆன் ஸுன்னாஹ் அடிப்படயிலான வானொலிச் சேவை மற்றும் zajilnews எனும் twitter ஊடான sms செய்தி சேவையையும் வழங்கி வருகிறோம்.

எமது தளத்தைப் பொறுத்தவரை எந்தவித பக்கச் சார்பும் இல்லாமல் இலங்கை நாட்டின் இறைமைக்கும் பாதிப்பு இல்லாத வண்ணம் செய்திகளைப் பதிவேற்றுவதே எமது நோக்கம்.

எம்மோடு இணைந்து சமூக நலன்கருதி எமது சேவைக்காகவும் உண்மைச் செய்திகளை எமக்கு நீங்கள் உறுதிபடுத்தி அனுப்பும் பட்சத்தில் இன்ஷா அல்லாஹ் அதை பதிவேற்ற தயாராகவுள்ளோம்.

எமக்கு செய்திகளை அனுப்பும் சகோதர்கள் உங்களை தகவல்களை எம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள உங்களின் தொலைபேசி இலக்கத்தை கட்டாயம் அனுப்பவேண்டும். உங்களால் அனுப்பப்படும் தகவல்கள் சரியானமுறையில் கையாளப்படும்.

எமக்கு உங்களின் செய்திகள் தகவல்களை அனுப்ப zajilmedia@gmail.com எனும் email முகவரியைப் பயன்படுத்தலாம்.

– Zajil Media Network Pvt Ltd –