கிணற்றில் தவறி விழுந்து வயோதிபர் மரணம்

0
103

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை,இலுப்பைக்குளம் வயல் பகுதியில் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து வயோதிபரொருவர் நேற்று (10) மாலை உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நிலாவெளி, இலுப்பைக்குளம், 08ம் வட்டாரத்தைச் சேர்ந்த வடிவேல் யோகராஷா (56வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- வழமை போன்று வீட்டிலிருந்து காலை நேரத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக செல்வதாகவும் மாலையாகியும் வீட்டுக்கு வராதமையால் அவரை தேடி அவரது மனைவியான விஜயலட்சுமி சென்றதாகவும் இதேநேரம் வயலுக்குள் இருந்த பெக்கோவால் தோண்ணப்பட்ட கிணற்றடியில் அவரது பாதணியும், குடிப்பதற்கு வழமையாக கொண்டு செல்கின்ற தண்ணீர் போத்தலும் காணப்பட்டது.

இதனையடுத்து கிணற்றை பார்த்த போது வீழ்ந்து கிடப்பதை அவதானித்ததாகவும், அயலவர்களை அழைத்து கிணற்றிலிருந்தவரை மீட்டதாகவும் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கினர்.

அத்துடன் மரணத்தில் எதுவித சந்தேகமும் இல்லையென அவரது மனைவி, உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து நிலாவெளி பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமியும் விசாரணையை முன்னெடுத்தனர்.

இதில் பெறப்பட்ட வாக்குமூலங்களில் எதுவித மாற்று கருத்துக்களும் தெரிவிக்கப்படாததையடுத்து மரணத்தை மனைவியிடம் ஒப்படைத்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY