பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – இம்ரான் எம்.பி

0
89

(அப்துல்சலாம் யாசீம்)

தற்போது நடைபெற்றுவரும் உயர்தர பரீட்சையில் பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.இந்த சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டின் பல பகுதிகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவை அகற்றும்படி பரீட்சை மேற்பாளர்களால் உத்தரவிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன பரீட்சை எழுத வரும் மாணவிகளை பரீட்சைக்கு சில நிமிடங்களுக்கு முன் இவ்வாறு நடாத்தப்படுவதன் மூலம் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுள்ளனர். இதனால் அவர்களினால் பரீட்சையில் வினாத்தாளில் கவனம் செலுத்தமுடியாது போயுள்ளது.இது அந்த மாணவிகளின் பெறுபேறுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு மாணவிகளின் பர்தாவை அகற்ற சட்டத்தில் இடமில்லை அவர்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் பெண் ஆசிரியர் ஒருவர் மூலம் சோதனை செய்யலாம். ஆனாலும் இவ்வாறான சோதனைகளை செய்வதுக்கான முன் ஏற்பாடுகளை மேற்பாளர்கள் செய்திருக்க வேண்டும்.

எனவே இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை தெளிவுபடுத்தியுள்ளேன். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஆராயும்படி பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்து மூல கோரிக்கை ஒன்றை சமர்பித்துள்ளதோடு இவ்வாறான சந்தர்பங்களில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகான கல்வி பணிப்பாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எந்த பரீட்சை மேற்பாளராவது சட்டத்துக்கு முரணான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY