கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிர்மானிக்க ஒப்பந்தம் கைச்சாத்து

0
520
  • இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபை அனுமதி வழங்கி வைப்பு
  • நஸீலா அக்கபர் ஹாஜியார் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

(விஷேட நிருபர்)

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் நிர்மானிக்கப்படவுள்ளது.

370 கோடி ரூபா செலவில் அல்ரா ஹோல்ரிங் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனத்தினால் இந்த தொழிற்சாலை நிர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கும் அல்ரா அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் அல்ரா அல்ரா ஹோல்ரிங் பிறைவட் லிமிடட் நிறுவனத்தின் தலைவரும் காத்தான்குடி நஸீலா நிறுவன குழுமத்தின் ஸ்தாபகருமான ஐ.எல்.அக்பர் மற்றும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவர் துமிந்த ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த தொழிற்சாலையை நிர்மானிப்பதன் மூலம் சுமார் 200 பேருக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இதன் உற்பத்திப் பொருட்கள் இலங்கையில் விற்பணை செய்யப்படுவதுடன் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

Naseela Akbarஇலங்கையில் பாரிய கட்டிட நிர்மானங்களுக்குரிய அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நான்குள்ளன. இது ஐந்தாவது தொழிற்சாலையாகும்.

இந்த தொழிற்சாலைக்கான கட்டிட நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்குள் இதன் நிர்மானப்பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இந்த தொழிற்சாலை திறக்கப்படுமென அல்ரா ஹோல்ரிங் பிறைவட் லிமிடட் நிறுவனத்தின் தவிசாளர் ஏ.எம்.உனைஸ் தெரிவித்தார்.

இதற்கான அனுமதி இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபையினால் கிடைக்கப் பெற்றது என்பது இங்கு முக்கியமான விடயமாகும்.

காத்தான்குடி நஸீலா நிறுவன குழுமத்தினர் நஸீலா பௌண்டேசன் நிறுவனத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாதார்ந்தம் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்கி வருவதுடன் சமூகத்தின் தேவையுடையோருக்கும் வறுமையானவர்களையும் அடையாளம் கண்டு உதவி செய்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY