புகையிலை மற்றும் புகைத்தல் போன்ற போதைப்பொருள் விற்பனையை தடைசெய்யுமாறு உப தவிசாளர் யூ.எல்.அஹமட் கோரிக்கை

0
119

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் போதைப்பொருள் பாவனையான புகையிலை, சிகரட், பீடி, சுருட் போன்றவற்றை விற்பனை செய்வதை தடைசெய்யக் கோரி ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் பிரதேச சபையில் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் நான்காவது அமர்வு அதன் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் கடந்த 26 ம் திகதி இடம்பெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உப தவிசாளர் மேற்சொன்னவாறு பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அங்கு தெரிவிக்கையில்,

தற்போதைய சூழ்நிலையில் ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமாகவே காணப்படுகின்றது. இதன் காரணத்தால் சமூகத்தில் பல்வேறுபட்ட சமூசச் சீரழிவுகள் காணப்படுகின்றன குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் தொல்லைகள் போன்றவைகள் நாளாந்தம் நடைபெறுகின்றன.

எனவே சிறந்தவொரு சமூகம் உருவாகவும், ஆரோக்கியமான மாணவ சமூகத்தை பெற்றெடுக்கவும் இவ்வாறான போதைப் பழக்கத்திலிருந்து நம் பிரதேசத்தையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்கு பொறுப்புவாய்ந்த சபை என்ற ரீதியில் இவ்விடையம் தொடர்பில் முன்வந்து இவ் போதைப்பொருள் விற்பனையை தடைசெய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY