ஆயித்தியமலை-மகிழவெட்டுவான் கிராமத்தில் மாணவனின் சடலம் மீட்பு

0
148

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவு, மகிழவெட்டுவான் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனொருவனின் சடலத்தைத் தாங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 29.07.2018 மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகிழவெட்டுவான் – கற்குடா கிராமத்தைச் சேர்ந்த நல்லரெட்ணம் யுகேசன் (வயது 16) என்பவரின் சடலமே மீட்கப்பட்டு உடற் கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மகிழவெட்டுவான் மகா வித்தியாலயத்தில் கற்கும் குறித்த மாணவன் சிறிது காலமாக உளநல ஆற்றுப்படுத்தல் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்திருந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாருமில்லாத வேளையில் இவர் சடலமாகக் காணப்பட்டார் என்றும் உறவினர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY