பிரதேச செயலகங்களை மையப்படுத்திய கிராமிய மட்டத்திலான சிறிய அளவிளான அபிவிருத்தி: பிரதமர்

0
67

(அப்துல் சலாம் யாசீம்)

பிரதேச செயலகங்களை மையப்படுத்திய கிராமிய மட்டத்திலான சிறிய அளவிளான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார்.

அத்துடன் கிராமிய மட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளும் திட்டங்கள் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தினால் நேரடி கண்கானிப்புக்கள் இடம்பெறுகின்றன.

விசேடமாக கிழக்கு மாகாணம் யுத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், கிழக்கு மாகாணத்துக்கு என விசேட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிழக்கில் சுற்றுலா துறையை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதில் போக்குவரத்து முக்கிய சிக்கலாகவுள்ளது.

அந்த சிக்கலை தீர்த்து கிழக்கின் சுற்றுலா துறை மேம்படுமத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY