ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழுக் கூட்டம்

0
69

(அகமட் எஸ். முகைடீன்)

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபைத் தேர்தல் 2018இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனைத் தொகுதியிலுள்ள அமைப்பாளர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசினால் முன்னெடுக்கப்படும் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் மூலம் கல்முனை மாநகர முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வட்டார ரீதியாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக குறித்த வேலைத்திட்டத்தின் விதிமுறைக்குட்பட்டதாக வட்டார மட்டத்தில் வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்தி திட்ட முன்மொழிவுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு வட்டார பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

2 4

LEAVE A REPLY