திருகோணமலை-மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

0
63

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தின் மாங்காயூற்றில் நிர்மாணிக்கப்பட்ட 99வது மற்றும் 100 வது மாதிரிக்கிராமங்களான தெட்சனாபுரம் மற்றும் கைலாயபுரம் ஆகிய மாதிரிக்கிராமங்கள் இன்று(29) வீடமைப்பு மற்றும் நிரமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

தெட்சனாபுரத்தில் 25 வீடுகளும் கைலாயபுரத்தில் 22 வீடுகளம் இதில் அடங்குவதிடன் இங்கே நீர்வசதி மற்றும் மின்சாரவசதி மற்றும் பாதைவசதிகளும் அரசாங்கத்தினால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிவைடைய முன் 2500 மாதிரிக்கிராமங்களின் வேலைகள் ஆரம்பிக்கப்படும். 2025ம் ஆண்டு அனைத்து மக்களதும் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதன் அடிப்படையில் தான் செயற்பட்டு வருவதாகவும் நல்லாட்சி அரசாங்கம் மக்களது தேவைகள் அறிந்து செயற்படுவதாகவும் இன்னோர் பிரவினர் அரச சிம்மாசனத்தை மீள பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் முண்டியடிப்பதாகவும் மக்கள் அதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் பாராமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் இம்ரான் மஹ்ரூப் எம்.எஸ்.தௌபீக், கே. துரைரட்ணசிங்கம் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

FB_IMG_1532859925277

LEAVE A REPLY