சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவராக பைசர் முஸ்தபா: செயலாளராக சுபையிர் தெரிவு

0
201

(எம்.ஜே.எம்.சஜீத்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவராக உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை முஸ்லிம் சம்மேளனத்தின் செயலாளராக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினரும், ஸ்ரீ.சு.கட்சியின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளருமான எம்.எஸ். சுபைர் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர க் கட்சியின் முஸ்லிம் சம்மேளனத்தின் கூட்டம் அமைச்சா் பைசர் முஸ்தபாவின் அலுவலக இல்லத்தில் இடம்பெற்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள்164 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனா். அத்துடன் அமைச்சா் மகிந்த அமரவீரவும் கலந்துகொண்டாா்.

37689770_10212895066151270_415976073767944192_o

LEAVE A REPLY