காத்தான்குடி டெலிகொம் வீதி காபட் இடும் பணிகள் அடுத்தவாரம் ஆரம்பம்

0
459

காத்தான்குடியிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்ய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை

காத்தான்குடியில் உள்ள வீதிகளை காபட் இட்டு அபிவிருத்தி செய்யுமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்த பணிப்புரைக்கு அமைய, டெலிகொம் வீதி அபிவிருத்திக்கான பணிகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை குறித்த வீதிக்கு காபட் இடுவது சம்பந்தமாக ஆராய கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் அபிவிருத்தி செய்வது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

இதேவேளை, டெலிகொம் வீதி உள்ளிட்ட காத்தான்குடியில் உள்ள ஏனைய வீதிகள் அபிவிருத்தி செய்வது சம்பந்தமான கலந்துரையாடலின் போது டெலிகொம் வீதியை உடனடியாக காபட் இட்டு அபிவிருத்தி செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார். அதற்கமைய அடுத்தவாரம் அளவில் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY