மான் இறைச்சி வைத்திருந்த ஆறு பேருக்கும் தலா நாற்பத்தையாயிரம் ரூபாய் வீதம் தண்டம்

0
152

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஆறு கிலோ ஜந்நூறு கிரேம் மான் இறைச்சியை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆறு நபர்களுக்கும் தலா நாற்பத்தையாயிரம் ரூபாய் வீதம் தண்டம் செலுத்துமாறு இன்று (23) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்

திருகோணமலை குச்சவௌி ,ஜாயா நகர் பகுதியைச்சேர்ந்த ஆறு பேருக்குமே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிலுள்ள காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கை பயன்படுத்தி மிருக வேட்டையில் ஈடுபட்ட ஆறு பேருக்கும் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.

அதில் அனுமதியின்றி காட்டுக்குள் சென்றமை, மான் இறைச்சியை வைத்திருந்தமை மற்றும் அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துவக்கை தம் வசம் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இதில் முதலாவது குற்றத்திற்காக பத்தாயிரம் ரூபாயும் இரண்டாவது குற்றத்திற்காக முப்பதாயிரம் ரூபாயும் மூன்றாவது குற்றத்திற்காக ஜயாயிரம் ரூபாயும் மொத்தமான ஒருவருக்கு தலா நாற்பத்தையாயிரம் ரூபாய் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் எதிர்வரும் வழக்கு 09ம்மாதம் 17ம் திகதி எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY