திருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி இல்லாமையினால் நோயாளிகள் அவதி

0
89

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரம் தூக்கி (லிப்ட்) பழுதடைந்த நிலையில் காணப்படுவதினால் நோயாளர்கள் மிகவும் அவதியுறுவதாக விஷனம் தெரிவிக்கின்றனர்.

பதினாறாம் வாட் பதினேழாம் வாட் மற்றும் 10ம் வாட்டுகளுக்கு செல்லும் பாரம் தூக்கி பல மாதங்களாக பழுதடைந்து காணப்படுவதினால் நடக்க முடியாத நிலையில் உள்ள நோயாளர்களை சிகிச்சைக்காக வாட்டுகளுக்கு அழைத்துச்செல்வதில் நோயாளர்களும் சக சிற்றூழியர்களும் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் இப்பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை கவனம் எடுக்காமல் நிதி பற்றாக்குறை என கூறிக்கொண்டு நிர்வாகம் செயற்பட்டு வருவதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற சிற்றூழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதாகவும் மத்திய அரசு மற்றும் அரச உயரதிகாரிகள் அரசியல் தலைவர்கள் நோயாளர்கள் விடயத்தில் அக்கறை காட்டி குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டுமென நோயாளர்களும் புத்திஜீவிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY