மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்பு

0
339

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை (21.07.2018) தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரண்டு சடலங்களும் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் ஒரு சடலமும் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆயித்தியமலை நெடியமடு 6ம் கட்டையைச் சேர்ந்த ரவி சார்திகா (வயது 18) அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை, தளவாய், புன்னைக்குடா வீதியைச் சேர்ந்த முத்தையா சிதம்பரம் (வயது 83) அப்பகுதியலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வயோதிபர் சடலம் கண்டெடுக்கபப்டுவதற்கு முதல்நாள் காணமல் போயிருந்தார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது மகள் சிதம்பரம் கலைச்செல்வி சடலத்தை அடையாளம் காட்டினார்.

இதனிடையே ஏறாவூர் – ஆறுமுகத்தான் குடியிருப்பு துரைச்சாமி வீதியைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான நல்லதம்பி கனகசபை (வயது 68) அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவரது மகள் கனகசபை கிருசாந்தி சடலத்தை அடையாளம் காட்டினார்.

இச்சம்வங்கள் தொடர்பாக அவ்வப்பபிரதேசங்களுக்குப் பொறுப்பான ஏறாவூர் மற்றும் ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ‪

LEAVE A REPLY