கட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்!

0
177

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை குச்சவௌி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சமலங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (22) மீட்கப்பட்டுள்ளதாக குச்சவௌிபொலிஸாார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான குச்சவௌி வடலிக்குளம் பகுதியைச்சேர்ந்த ஏ.எல். முகம்மட் அஸாம் (26 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடலிக்குளத்திலிருந்து அதிகாலை மிருக வேட்டைக்காக சென்ற போது தான் கொண்டு சென்ற கட்டுத்துவக்கு என்றழைக்கப்டும் சைட்டடியான் என கூறப்படும் துப்பாக்கி வெடித்ததினாலேயே அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் எனவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை குச்சவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY