மனித உரிமையும் மரண தண்டனையும்

0
175

(Mohamed Nizous)

பத்துப் பேரின் தூக்குக்காக
பதறுகிறது மேற்குலகம்
கொத்துக் கொத்தாய் கொல்கிறான்கள்
ஒத்த நாடும் கேட்கவில்லை

போதை விற்கும் உயிர்களுக்காய்
போராட்டம் வெடிக்கிறது
ஏதுமறியா மழலை உயிர்
யாருமில்லை கேள்வி கேட்க

வாழ்க்கையைக் கெடுப்பவனை
வாழவைக்கத் துடிக்கிறார்
வாழத் துடிப்பவனின்
வாழ்க்கையைக் கெடுக்கிறார்

அரபு நாட்டை போரால்
அழித்துப் போடமுனைபவர்கள்
பிற நாட்டை போதையால்
பிழிந்தெடுக்க முனைகிறார்

எது மனித உரிமை என்று
இன்னுமிவர்க்குப் புரியவில்லை
பொது மனித உரிமைகளை
போதையால் அழிப்போரின்
உரிமைகளைக் காப்பதிலும்
ஊர் மக்கள் வாழ்க்கை
கருமையாகாமல் காத்தல்
காலத்தின் கடமை.

வரிச் சலுகையிலும்
வருகின்ற லாபத்திலும்
பொறுப்பான கடமை
போதையை ஒழித்தல்

போதை ஒழிய வேண்டும்
பாதை தெளிய வேண்டும்
பாதகர் அழிய வேண்டும்
பலர் வாழ்க்கை விடிய வேண்டும்

LEAVE A REPLY