அகில இலங்கை சமாதான நீதவானாக வியாழராசா சத்தியப்பிரமாணம்

0
111

கிழக்கிழங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையை சேர்ந்த திரு. பிரமாத்மானந்தன் வியாழராசா அவர்கள் இன்று (20) வாழைச்சேனையில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் பிரமாத்மானந்தன் – வனிதா தம்பதியரின் மகனாவார். ஊத்துச்சேனை வீரநகர் அ.த.க. பாடசாலை, மாவடிவேம்பு விக்னேஸ்வரா பாடசாலை, வாழைச்சேனை பேத்தாழை விபுலானந்தா கல்லூரி மற்றும் வாழைச்சேனை இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவரும் ஆவார்.

மேலும் இளைஞர் கழக தலைவராகவும் முன்னோடி இளைஞர்களின் தலைவராகவும் செயற்பட்டுள்ளதுடன் மற்றும் ஊத்துச்சேனை இளைஞர் கழக ஸ்தாபகருமாவார்.

தற்போது இலங்கை மீன்பிடி துறைமுக சட்டவாக்க கூட்டுத்தாபனத்தில் முகாமைத்துவ உதவியாளராகவும் மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச மத்தியஸ்த குழாத்தின் உபதவிசாளராகவும் சேவையாற்றும் இவர், சிறு வயதில் இருந்தே இளைஞர்களின் சமூக நலனை கருத்தில் கொண்டு சேவையாற்றி வரும் இவருக்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு நீதி அமைச்சர் தலதா அத்துகோரல அவர்களால் இவ் அகில இலங்கை சமாதான நீதவான் நியமனம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY