சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இளைுனுக்கு மறியல்

0
162

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் 14 வயது சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனை எதிர்வரும் ஆகஸ்ட் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (19) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டை ஜின்னாபுரம் பகுதியைச்சேர்ந்த முகம்மது சப்ரின் (18 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது குறித்த இருவரும் வீட்டில் திருமணம் முடிப்பதற்கு விருப்பமில்லாத நிலையில் தான் விரும்பிய 14 வயது சிறுமியை வீட்டார்களுக்கு தெரியாமல் அழைத்துச்சென்று குடும்பம் நடாத்தி வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் சிறுமியை திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சோதனைக்காக உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் சிறுவயது திருமணம் அதிகளவில் இடம் பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு இது ஒரு முன்னுதாரணமாகும் எனவும் புல்மோட்டை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY