ஒலுவில் பாலமுனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேரடி விஜயம்!

0
102

பள்ளிவாசல் நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தில் நூற்றுப்பதினாறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அம்பாறை மாவட்டத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அப்துல் அன்சார் மற்றும் ஜமாஅத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளை பார்வையிட அங்கு விஜயம் செய்தார்.

பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் இப்பள்ளிவாசலின் கட்டிட நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர், தனது நிதி ஒதுக்கீட்டில் பள்ளிவாசலின் மாபிள் பதிக்கும் பணிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.

பின்னர், கடந்த எட்டு வருடங்களாக இப்பள்ளிவாசலில் இயங்கி வரும் ஹிப்ழ் மற்றும் கிதாபு மத்ரஸா மாணவர்களுடன் இராஜாங்க அமைச்சர் சினேகபூர்வமாக கலந்துரையாடியமைக் குறிப்பிடத்தக்கது.

(முகம்மட் சஜீ- ஊடகப்பிரிவு)

WhatsApp Image 2018-07-17 at 4.06.27 PM

LEAVE A REPLY