திருகோணமலை பொது வைத்தியசாலை உளநலப்பிரிவிற்கு அருகில் மலசலகூடம் நிரம்பி வழிகிறது

0
66

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை பொது வைத்தியசாலை உளநலப்பிரிவிற்கு அருகில் மலசலகூடம் நிரம்பி வழிவதினால் உளநலம் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் மிகவும் அவதியுற்று வருவதாக நோயாளர்களின் உறவினர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபைக்கு கீழ் இயங்கி வந்த திருகோணமலை பொது வைத்தியசாலை தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. நோயாளர்களின் கருத்துக்கள் மற்றும் குறைபாடுகளை ஆரம்பத்தில் இலகுவான முறையில் தெரியப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இப்போது நோயாளர்களுக்கு இடம் பெறும் அசம்பாவிதங்கள் குறித்து தெரிவிக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

உளநலம் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை இன்னும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உளநலம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாப்பாடுகளை வழங்கும் நேரத்தில் அதனை உண்பதற்கு கூட இடமில்லாத நிலை காணப்படுவதாகவும் மலசல கூடம் நிரம்பி வழிந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அதேநேரம் மூக்கினை பொத்திய நிலையில் பார்வையிட வர வேண்டியுள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

மனநோயாளர்கள் தங்கியிருக்கும் வாட்டாக இருப்பதினாலேயா மலசல கூடம் நிரம்பியதை கவனிக்காமல் இருக்கின்றார்கள் எனவும் நோயாளர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது விடயமாக அங்கு கடமையாற்றும் ஊழியரொருவர் கருத்து தெரிவிக்கையில் பல மாதங்களாக மலசலகூடம் நிரம்பி வழிவதாக வைத்தியசாலை பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியும் இன்னும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் நோயாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருநாளும் வைத்தியசாலை தரப்பினரை திட்டுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடத்திலேயும், கட்டப்படவிருக்கின்ற புதிய கட்டிடம் தொடர்பில் டென்டர் போடுவதிலேயே அதிகளவில் அக்கறை காட்டி வருவதாகவும் பழைய கட்டிடங்களின் குறைபாடுகள் மற்றும் நிரம்பி வழியும் மலசலகூடம் தொடர்பில் அக்கறை காட்டுவதில்லையெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே நோயாளர்களின் விடயத்தில் அக்கறை காட்டுவதுடன் சுகாதாரத்தை பேனும் வைத்தியசாலையாக திருகோணமலை பொது வைத்தியசாலையாக மாற்றப்பட வேண்டுமெனவும் நோயாளர்களும், நோயாளர்களின் உறவினர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

IMG_20180717_173354

LEAVE A REPLY