பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளில் கல்முனைத் தொகுதியில் பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன

0
68

(அகமட் எஸ். முகைடீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக கல்முனை முஸ்லிம் பிரதேசத்தில் பழைய தபாலக வீதி காபட் வீதியாகவும் மருதமுனை பிரதேசத்தில் காரியப்பர் வீதி மற்றும் மத்திய வீதி, கல்முனை தமிழ் பிரதேசத்தில் அம்மன் கோவில் வீதி மற்றும் உடையார் வீதி ஆகியவை மெடலிங் தார் வீதியாகவும் புனரமைக்கப்படவுள்ளதோடு கல்முனை முஸ்லிம் பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக அலியார் மேற்கு வீதி மற்றும் மத்திய வீதி (மஃமூத் மகளிர் கல்லூரி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரை), சாய்ந்தமருது பிரதேசத்தில் அல்-ஹிலால் வித்தியாலய வீதி என்பன காபட் வீதியாகவும் புனரமைக்கப்படவுள்ளன.

பிரதி அமைச்சர் ஹரீஸின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களம் என்பன குறித்த வீதிகளை புனரமைப்பதற்கான திட்டவரைபினை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பித்திருந்தனர்.

அதற்கமைவாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் அவ்வீதிகளை புனரமைப்பதற்கான விலைமனுக்கள் தற்போது கோரப்பட்டு அவ்வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அலியார் வடக்கு வீதி, மத்திய வீதி (மஃமூத் மகளிர் கல்லூரி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரை), அல்-ஹிலால் வித்தியாலய வீதி என்பன ஏற்கனவே குறிப்பிட்ட சில கிலோ மீற்றர் தூரங்களுக்கு முதற்கட்டமாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY