“கம்பரலிய” திட்டத்தின் மூலம் திருகோணமலையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவுள்ளோம்: இம்ரான் எம்.பி

0
59

கம்பரலிய திட்டத்தின் மூலம் திருகோணமலையின் கிராமிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பவுள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை காலை கொழும்பில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட “கம்பரலிய” வேலைத்திட்டம் அண்மையில் பிரதமரால் நிக்கவரட்டியவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த 80,000 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் குளங்கள் பல புனரமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்படவுள்ளன. அத்துடன் கடந்த ஆட்சிபோல் அல்லாமல் இதன் ஒப்பந்தம், குளத்தை புனரமைக்கும் போது கிடைக்கும் மண் போன்றன விவசாய சங்கங்களுக்கே வழங்கப்படவுள்ளன.

மேலும் கிராமிய வீதிகள் புனரமைப்பு, கிராமப்புற பாடசாலைகளுக்கு குடிநீர், கழிப்பறை வசதி, பாடசாலை மைதானங்கள் புனரமைப்பு ,மின்சாரமற்ற வீடுகளுக்கு மின்சார இணைப்பு மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதார உதவி என பல திட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் எமது மாவட்ட கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் 200 மில்லியன் ஒதுக்கப்படவுள்ளது.

இந்த நிதியின் மூலம் மேலே கூறிய பல அபிவிருத்தி திட்டங்களை பிரதமரின் வழிகாட்டலில் மிக விரைவில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் நான் ஆரம்பிக்கவுள்ளேன் என தெரிவித்தார்.

LEAVE A REPLY