கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு ஆரம்பம்

0
138

(அப்துல் சலாம் யாசீம்)

கிழக்கு மாகாணத்தின் 23வது பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இன்று (17) கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்களமும் விளையாட்டு திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள இப்போட்டி நிகழ்ச்சியில் 17 வலயங்களைச்சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பற்றினர்.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இன்று செவ்வாய்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப்பேட்டி 21ம் திகதி வரை இடம் பெறவுள்ளதாகவும் விளையாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அசங்க அபேகுணவர்தன கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் எம்.டி.நிஸாம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_3916 DSC_3922

LEAVE A REPLY