கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பிற்கு விருது

0
41

(கல்முனை நிருபர்)

கல்முனை KDMC நெனசலயின் 9 வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இன் நிகழ்வில் குறுகிய காலத்தில் கல்முனை நகரில் சிறப்பாக சேவையாற்றி வரும் சிவில் சமூக அமைப்பாகவும் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று சமூகத்துக்கு தொண்டாற்றும் நிறுவனமாகவும் அடையாளம் காணப்பட்டு KDMC நெனசல நிறுவனத்தினால் அதற்கான விருது கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேற்படி விருதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், KDMC நெனசல நிறுவனத்தின் பணிப்பாளர் சீனி முஹம்மது ஹாஜா கான் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்தனர். இவ் விருதினை கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக உபதலைவர் அல்ஹாஜ். எஸ்.அப்துல் சமத் பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY