இலவச இருதய சிகிச்சை முகாமில் 250 பேர் பங்கேற்பு

0
71

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூரில் சனி மற்றும் ஞாயிறு (14, 15) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற்ற இலவச இருதய சிகிச்சை முகாமில் சுமார் 250 இருதய நோயாளிகள் தம்மைப் பரிசோதித்து சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டதாக சிகிச்சை வழங்கிய இருதய நோய் வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் அறக்கட்டளை அமைப்பான நசீர் ஹாபீஸ் பவுண்டேசனின் நிதி அனுசரணையில் இந்த விஷேட இருதய நோய் வைத்திய சிகிச்சை முகாம் இடம்பெற்றது.

ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் இரு தினங்களும் இடம்பெற்ற இந்த இலவச இருதய சிகிச்சை முகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள முஸ்லிம் தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமக்கான சிசிச்சைகளையும் வைத்திய ஆலோசனைகளையும் பெற்றிருந்தனர்.

இந்தஇருதய சிகிச்சை முகாமில் பங்குபற்றி வறிய குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் 20 இருதய நோயாளிகள் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் முழுமையான இலவச சிகிச்சைக்குத் தகுதி பெறுவர் என்றும் நசீர் ஹாபீஸ் பவுண்டேசன் அமைப்பு அறிவித்துள்ளது.

Cardiology DSC06818 DSC06841

LEAVE A REPLY