வல்லரசுகளின் சதியால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

0
108

இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடிகளுக்கும் – பிரச்சினைகளுக்கும் மத்தியில் வாழந்து வருவதாகவும், வல்லரசு நாடுகளின் சதித்திட்டத்தினாலேயே அந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் 68ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை (15) காலை அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

இலங்கையில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் – நெருக்கடிகளுக்கும் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டுள்ளனர். இலங்கையில் மாத்திரமல்லாது உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு இந்நிலை தான் உள்ளது.

நாங்கள் சர்வதேச மாநாடுகளுக்கு செல்கின்ற போது மிக மோசமான காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை உணர முடிகின்றது. உலகத்தில் உள்ள முஸ்லிம் நாடுகள் மத்தியிலும் பிரச்சினை அதேபோன்று முஸ்லிம்கள் குறைவாக வாழ்கின்ற நாடுகளிலும் பிரச்சினை.

முஸ்லிம்களை குழப்புவதற்கு, முஸ்லிம் நாடுகளை குழப்புவதற்கு சில வல்லரசு நாடுகள் திட்டமிட்டு செயற்படுகின்ற நிலையை காண்கின்றோம்.

பொருளாதார ரீதியில் பலமுள்ள சாம்ராஜ்யங்களாக வளர்ந்த பல முஸ்லிம் நாடுகள் இன்று சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளதை காண்கின்றோம். பல தலைவர்களை கொன்று குவித்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் – பிரச்சினைகளை எதிர்கொள்ள நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படவேண்டியுள்ளது- என்றார்.

DSC_0327 DSC_0287

LEAVE A REPLY