ஓட்டமாவடி ECGO (எகே) கிண்ண சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி

0
128

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

ECGO கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. கல்வி தொழில் வழிகாட்டல் அமைப்பின் (ECGO) ஏற்பாட்டில் தொடர்ச்சியாக நான்காண்டுகளாக பாடசாலை மாணவர்களிடையே விளையாட்டினூடாக நற்புறவை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்டு வரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நான்காவது தொடரில் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவான ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 2019, 2020ம் ஆண்டுகளில் பரீட்சை எழுதவுள்ள உயர்தர மாணவர்களின் அணிகள் இக்கிரிகெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டனர். நாணய சூழற்சி அடிப்படையில் 2020ஆண்டு அணியினர் களத்தடுப்பிற்கும் 2019ஆண்டு அணியினர் துடுப்பாட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டனர்.

10 ஓவர் என்ற அடிப்படையில் இடம் பெற்ற இக்கிரிகெட் சுற்றுப்போட்டியில் 2019 ஆம் ஆண்டு அணியினர் ஒன்பது ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 2020 ஆண்டு அணியினர் 6.5 ஓவர்களில் தமது சிறந்த துடுப்பாட்டங்களின் மூலம் நான்கு விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ECGO அமைப்பின் தலைவர் எம்.எம். நவாஸ் ஆசிரியர் தலைமையில் இடம் பெற்ற இக்கிரிகெட் இறுதிசுற்றுப்போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரஹ்மான், பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.எம். கபீர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

இங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைப்பின் தலைவர் எம்.எம்.நவாஸ் ஆசிரியர் கல்வி தொழில் வழிகாட்டல் அமைப்பானது இப்பிரதேச மாணவர்களின் கல்வி, தொழில் ரீதியான வழிகாட்டல்களை வழங்கி வருவதுடன், விளையாட்டினூடாகவும் இப்பிரதேச மாணவர்களிடையே பொறாமையற்ற போட்டித்தன்மை உருவாக்கி கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளிலும் சிறப்பான அடைவுகள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ECGO கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியினை கடந்த நான்காண்டுகளாக தொடர்ச்சியாக நடாத்தி வருவதாக குறிப்பிடத்தக்கது.

14 copy 15 copy 16 19 copy

LEAVE A REPLY