தூளும் தூக்கும்

0
121

(Mohamed Nizous)

அவன்
தூளை விற்க
தாளை சுருட்டி விற்ற போது
வாழ வேண்டிய
ஆளையும் சுருட்டி விட்டான்

செய்தது
வியாபாரம் அல்ல
விசம்
அதனால் பலர் வாழ்வு
நஞ்சானது
நிசம்

இளைஞனுக்கு
இலவசமாகக் கொடுத்து
இழுத்தான் இழுக்கானவன்.
கலைந்து போன பெறோரின்
கனவுகள் அவன்
கழுத்தை அழுத்தட்டும்.

கோடி வாழ்க்கை வாழ
குடு கடத்துகிறான்–அவன்
நாடி நரம்பில்
ஓடுகின்ற ரத்தத்தில்
ஆடிப் போன குடும்பங்களின்
அழுகை கலந்திருக்கிறது

பல குடும்பஙக்ளின்
தூக்கதைக் கெடுத்தவனை
தூக்க எடுத்த முடிவு
துக்கம் தருவதல்ல
தக்க முடிவு.

அந்தத் தூக்கு மேடைக்கு
அம்புகளை மட்டுமல்ல
பின்னால் இருந்து ஏவிய
‘பெரிய மனிதர்களையும்
ஏற்ற வேண்டும்-இந்த
போதை என்ற புற்று நோயை
மாற்ற வேண்டும்…!

LEAVE A REPLY