நீதிமன்றத்திற்குள் கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்

0
129

(அப்துல் சலாம் யாசீம்)

நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபருக்கு சட்ட விரோதமான முறையில் கேரளா கஞ்சாவை வழங்க வந்த சந்தேக நபரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

திருகோணமலை நீதிமன்றத்திற்குள் மூன்று தடவைக்கு மேலாக சுற்றித்திரிந்த இளைஞனொருவரை நீதிமன்ற பொலிஸார் நேற்று மாலை வியாழக்கிழமை சோதனையிட்ட போது அவரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று வௌ்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இக்கட்டளையை பிறப்பித்தார்.

அத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இளைஞன் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரின் வழக்கிற்கு வந்தவரெனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர் தொடர்பில் முன்னைய குற்றம் தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்து வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY