கல்முனை நெனசல அறிவகத்தின் 09 வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0
63

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபையின் அனுசரணையுடன் இயங்கும் கல்முனை நெனசல கல்வியகத்தின் 9வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (08.07.2018) கல்முனை ஆசாத் பளாஸா மணடபத்தில் நெனசல நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். எம்.ஹாஜா கான் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சுமார் 250 மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அரச தொழில் முயற்சிகள் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிதார்.

கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ் அப்துக் ஜலீல், விசேட அதிதிகளாக அமெரிக்கா விசுவம் கெம்பஸ் பணிப்பாளர் டாக்டர் டெக்ஸ்டர் பெர்னாண்டோ, கோட் பெரம் குரூப் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் டாக்டர் கே.அப்துல் நவாஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ் நிசார், ஏ.எம்.பைறோஸ் மற்றும் கல்முனை அபிவிருத்திக்கும், முகாமைத்துவத்துவத்திற்குமான சபையின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி யு.எம்.நிசார், கல்முனை அபிவிருத்திக்கும், முகாமைத்துவத்துவத்திற்குமான சபையின் நிர்வாக செயலாளலரும் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ மஜிட் மற்றும் கல்முனை அபிவிருத்திக்கும், முகாமைத்துவத்துவத்திற்குமான சபையின் பணிப்பாளர் முன்னாள் உதவி கல்வி பணிப்பாளர் மெளலவி ஸ்சட்.எம் நதீர் மற்றும் பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் நெளபர் ஏ பாவா உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் விஷேட அம்சமாக சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.வை. அமீர் அவர்களின் ஊடக திறமையை நெனசல கல்வியகம் பாராட்டி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1531073697664 FB_IMG_1531067850688 FB_IMG_1531073658362

LEAVE A REPLY