குச்சவௌி பிரதேச சபையில் இடமாற்றங்கள் ஒருதலைப் பட்சமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது

0
308

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை குச்சவௌி பிரதேச சபையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் எவ்வித காரணமுமின்றி ஒருதலைப் பட்சமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குச்சவௌி பிரதேச அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை தவிசாளருமான ஆதம்பாவா தௌபீக் தெரிவித்துள்ளார்.

பிரதேச சபையில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் பலர் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது கட்சிகளுக்கு வேலை செய்ததாகவும் அதனாலேயே அரசியல் பழிவாங்கல் காரணமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் சமகாலத்தில் தங்களுடன் தேர்தல் காலத்தில் சேவையாற்றிய ஊழியர்கள் இருக்கையில் குறிப்பிட்ட சிலரை மட்டும் இடமாற்றம் செய்ததாவது ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே தான் கருதுவதாகவே அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக குச்சவௌி பிரதேச சபை முன்னாள் தலைவர் ஆதம்பாவா தௌபீக் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியூதீன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இது பற்றி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கருத்துக்களை மட்டும் உள்வாங்காமல் அரசியல் வாதிகளினால் இடமாற்றம் செய்யப்பட தீர்மானித்துள்ளவர்கள் பற்றியும் சட்ட நடமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY