மஹா பஸ்-வேன் மோதிய கோர விபத்தில் சிக்கிய மூன்றாமவர் இருவாரங்களுக்குப் பின்னர் மரணம்

0
669

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை கிரான் பகுதியில் கடந்த 25.06.2018 நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர், இரு வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் (07) சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த வேல்முருகு சுபராஜ் (வயது 37) என்பவரே மரணித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற கணப்பொழுதிலேயே இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு தனியார் (மஹா) பஸ்ஸும் வாழைச்சேனைப் பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த சிறிய ரக வேனும் மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவித்திருந்தது.

இதில் வேனைச் செலுத்திச் சென்ற சாரதி வினோஜன் (வயது 25) மற்றும் அதே வேனில் பயணித்த பிரகாஷ் கெல்வின் (வயது 11) எனும் சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த சிறுவனும் ஸ்தலத்திலேயே மரணமடைந்திருந்தனர்.

Kiran Accident 25.06.2018

LEAVE A REPLY