செங்கலடி நகரில் சைக்கிளில் சென்ற மேசன் தொழிலாளி விபத்தில் சிக்கி மரணம்; மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம்

0
77

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவு செங்கலடி நகரில் சனிக்கிழமை 07.07.2018 மாலை 6 மணியளவில் இடமத்பெற்ற வீதி விபத்தில் மேசன் தொழிலாளி ஒருவர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதியதில் சைக்கிளில் சென்ற மேசன் தொழிலாளியான எஸ். ஜெகநாதன் (வயது 34) என்பவர் ஸ்தலத்திலேயே பலியானார்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY