அனுமதிப்பத்திரமின்றி சிப்பி தூல் கொண்டு சென்றவர் கைது

0
131

(அப்துல் சலாம் யாசீம்)

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காக்காமுனை பகுதியிலிருந்து பொலன்நறுவைக்கு அனுமதிப்பத்திரமின்றி லொறியில் சிப்பி தூல் கொண்டு சென்ற நபரொருவரை இன்று (08) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவ்வாகனத்தை சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இல்லையென தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

50 கிலோ நிறை கொண்ட 185 பேக் சிப்பி தூல் கைப்பற்றப்பட்டதாகவும்,கைது செய்யப்பட்ட நபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொலன்னறுவை,சுங்காவில் பகுதியைச்சேர்ந்த முகம்மது ஹனி றஸாக் (40வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY