கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் விற்பனை நிலையம் மட்டுவில் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

0
152

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விற்பனை நிலையம் மற்றும் காட்சிக் கூட கட்டிடம் என்பன நேற்று சனிக்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளுராட்சி மற்றும் கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகல்லாகம பிரதம அதிதியாகவும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விற்பனை நிலையத்தினை இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தமைக் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2018-07-07 at 1.16.29 PM Hizbullah Rohitha Bogollagama

LEAVE A REPLY