இந்த நாட்டில் கூட்டுறவு இயக்கம் சக்தி வாய்ந்த பலம் வாய்ந்த இயக்கமாகும் அதனை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பேன்

0
93

மட்டக்களப்பில் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு தின விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

(விஷேட நிருபர்)

இந்த நாட்டில் கூட்டுறவு இயக்கம் சக்தி வாய்ந்த பலம் வாய்ந்த இயக்கமாகும் அதனை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்தார்.

96வது சர்தேச கூட்டுறவு தின விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 7.7.2018 சனிக்கிழமை மாiலை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

வர்த்தக வாணிபபத்துறை அமைச்சர் றிசாட்பதியுதீன் இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சிறியானி விஜேசேகர, பிரதியமைச்சர்களான புத்திக பத்தரன, எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலிசாஹீர் மௌலானா கிழக்கு மாகாண ஆளுனர் மற்;றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகள் கூட்டுறவு ஆணையாளர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

DSC_3091இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி நான் முதன் முதலாக கூட்டுறவு மாநாட்டில் கலந்து கொண்டது ஒரு கூட்டுறவு ஊழியனாகத்தான் கலந்து கொண்டேன்.

அதன் பிறகு அமைச்சராக கலந்து கொண்டேன். இன்று உங்கள் ஜனாதிபதியாக கலந்து கொள்கின்றேன்.

கூட்டுறவு என்பது மக்கள் இயக்கமாகும். அது அரசாங்கத்தின் இயக்கமல்ல.

மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற ஒரு இயக்கம் தான் கூட்டுறவு இயக்கமாகும்.

அரசாங்கத்தின் கொள்கைக்கும் கூட்டுறவுத்துறை கொள்ககைக்குமிடையில் முறன்பாடுகள் இருந்தாலும் அதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்ள முடியும்.

உலகில் பல செல்வந்த முன்னேற்ற மடைந்த நாடுகளிலே மிகவும் பலம் வாய்ந்த கூட்டுறவு இயக்கங்கள் இருக்கின்றன.

அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் ஏனைய கொள்கைகள் கூட்டுவுத்துறை கொள்கைகளுடன் எந்த விதத்திலும் முறன்பாடாக அமைய முடியாது.

எமது நாட்டில் இந்த கூட்டுறவு துறைக்கு இருக்க கூடிய நீண்ட கால சரித்திரத்தை அனுபவத்தை பார்க்கும் போது அனைத்து மக்களுக்கும் இந்த கூட்டுறவுத்துறையில் மிகவும் அன்பும் பாசமும் இருந்து வருகின்றது.

எல்லோரும் ஒன்று பட்டு செயற்படுகின்ற ஒரு வழிமுறையே கூட்டுறவுத்துறையாகும்.

மக்களுக்கு தனியாக வாழ்வதை விட மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டாக வாழவேண்டும் என்ற அந்த உன்னத போதனை எடுத்துச் சொல்கின்ற ஒரு இயக்கம் தான் இந்த கூட்டுறவு இயக்கமாகும்.

கூட்டுறவு இயக்கம் சில நேரம் விழுந்து விடும் ஆனால் விழுந்து விழுந்து எழுந்து விடும்.

மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படித்தான் விழுந்து விழுந்து எழுந்து விடுகின்றார்கள். சில நாடுகளிலும் அப்படித்தான் உள்ளது. சில அமைப்புக்களிலும் அப்படித்தான் இருக்கின்றது.

சில நிறுவனங்களின் நிலைமையும் அப்படித்தான் இருக்கின்றது. தனிப்பட்ட நபர்களின் வாழக்கையும் அப்படித்தான்.

எனவே கூட்டுறவு இயக்கம் விழுந்தாலும் அது எழுந்து வருகின்ற ஒரு மனிதாபிமான இலட்சனமாகத்தான் இந்த கூட்டுவு இயக்கம் இருந்து வருகின்றது.

தன்னைப் பற்றி மாத்திரம் சிந்திக்கின்றவர்களுக்கு கூட்டுறவு இயக்கத்தில் இருக்க முடியாது.

சமூகத்திலுள்ள ஏனையோரைப்பற்றி சிந்திக்கின்ற கவனிக்கின்றவர்கள் மாத்திரம் தான் கூட்டுறவு இயக்கத்தில் இருக்க முடியும்.

இந்த கூட்டுறவு இயக்கத்தை கட்டியெழுப்புவதில்; அமைச்சர் றிசாட் பதியுதீன் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்.

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும அதன் உத்தியோகத்தர்களுக்கும் நன்றி கூறுகின்றேன.; அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு இந்த கூட்டுறவு இயக்கத்தை பற்றி நல்லதொரு அறிவும் புரிந்துனர்வும் இருக்கின்றது.

இந்த நாட்டில் கூட்டுறவு இயக்கம் சக்தி வாய்ந்த பலம் வாய்ந்த இயக்கமாகும். அதனை எடுத்துக்காட்ட வேண்டும்.

கூட்டுவுறவுத்துறையினரின் பிரச்சினைகளை முன் வைப்பதற்காக ஒரு பொது மேடைக்கு முன் வரவேண்டும்.

மன உறுதியோடு கூட்டுறவுத்துறையினர் செயற்பட வேண்டும் என இந்த 96வது வர்வதேச கூட்டுறவு விழாவில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கூட்டுறவு இயக்கம் மக்கள் சத்தியுள்ள இயக்கமாகும். மற்றய இயக்கங்களோடு திறமை காட்ட கூட்டுறவுத்துறையினருக்கு சக்தியுண்டு. கூட்டுறவுத்துறையினருக்குள்ள பிரச்சிகைள் தொடர்பில் கூட்டுறவு சம்மேளனங்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து பேச பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.

உங்களைப் பற்றி கவனம் செலுத்தாமல் இருக்கின்றார்கள் என்றும் தெரிகின்றது.

உங்கள் மீது கவனம் செலுத்துவோம். இந்த கூட்டுறவு சம்மேளனத்திற்கு அடுத்த பொருளாதார கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

அந்த இடத்தில் உங்கள் பிரச்சினைகள் பற்றி பேச்சு வார்த்தையில் ஈடுபடுங்கள்.

உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அது நல்ல சந்தர்ப்பமாகும்.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கூட்டுறவுத்துறையினர் பற்றிய நல்ல தீர்மானங்கள் எடுக்க எண்ணியிருக்கின்றேன்.

அடுத்த 97வது சர்வதேச கூட்டுறவு தின விழாவை மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் நடாத்த முடியும் என நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

இதன் போது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டடிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்;கப்பட்டன.

LEAVE A REPLY