கிழக்கு மாகாண ஆளுனரின் மட்டு விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

0
213

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இரண்டு கைக்குண்டுகள் இன்று (05) வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு லவ் லேனிலுள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள வாகனத்தரிப்பிட வளவிற்குள்ளேயே இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இங்கு சுத்தம் செய்து கொண்டிருந்த போது இந்தக் கைக்குண்டுகள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து மட்டக்களப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு விரைந்த மட்டக்களப்பு பொலிசார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் விஷேட அதிரடிப்படையினர் அக்கைண்டுகள் இரண்டையும் மீட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

IMG-20180705-WA0016

LEAVE A REPLY