காத்தான்குடியில் ஒரே இலக்கத்துடன் பாவித்து வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை காத்தான்குடி பொலிசார் மீட்பு: இருவர் கைது

0
598

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் ஒரே இலக்கத்துடன் பதிவு செய்யப்படாமல் பாவித்து வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை காத்தான்குடி பொலிசார் மீட்டுள்ளதுடன் அம் மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த இருவரையும் நேற்று (04) புதன்கிழமை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

EP BFA-2727 எனும் இலக்கத்தை பயன் படுத்தி பாவித்து வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையே காத்தான்குடி பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிசாருக்கு கிடைத்த தகவலையொன்றையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சி மற்றும் போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரது ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் பொலிசார் மேற் கொண்ட சோதனையின் போதே பதிவு செய்யப்படாத இந்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடி 6ம் குறிச்சியில் மேற்படி இலக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்பட்டு அதற்;கான பதிவு மற்றும் காப்புறுதிச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளன. ஆனால் இதே இலக்கமுடைய மற்றய மோhட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படாமலும் காப்புறுதிச் சான்றிதழ் பெறப்படாமலும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கான இலக்கத்தை வைத்து போலியான இலகத்தகட்டை தயாரித்து கடந்த ஒரு வருட காலமாக பாவித்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த மோட்டார் சைக்கிள் இரண்டையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பாவித்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியுள்ள காத்தான்குடி பொலிசார் அதனை பாவித்து வந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்;று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

DSCN2084

LEAVE A REPLY