மட்டக்களப்பில் நவீனமுறையில் நிர்மானிக்;கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம் திறந்து வைப்பு

0
163

(விஷேட நிருபர்)

மட்டக்களப்பில் நவீனமுறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம் (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரின் நிதியில் அவரின் சொந்த முயற்சியினால் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த உடற் பயிற்சிக் கூடத்தினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர மேயர் ரி.சரவணபவன் ஆகியோர் வைபரீதியாக திறந்து வைத்தனர்.

இந்த வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, கோவிந்தன் கருணாகரம் (ஜனா) முன்னாள் மாகாண அமைச்சர் கே.துரைராஜசிங்கம் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரட்ணம் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பலர் ஒரே நேரத்தில் உடற் பயிற்சியை மேற் கொள்ளக் கூடிய வகையில் பல் வேறு இயந்திரங்களுடன் இந்த உடற்பயிற்சிக் கூடம் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

DSCN2004 DSCN2006

LEAVE A REPLY