(Highlights) நெய்மர் ராஜ்யம்: காலிறுதியில் பிரேசில்

0
153

DhHeByNXUAA_-vNஉலக கோப்பை தொடரில் ‘ரவுண்டு–16’ போட்டியில் ‘ரவுண்டு’ கட்டி அடித்தார் நெய்மர். ஒரு கோல் அடித்த இவர், மெஸ்சி, ரொனால்டோ போல ஏமாற்றாமல், தனது ராஜ்யத்தை நிலை நிறுத்தி பிரேசில் அணியை காலிறுதிக்கு கொண்டு சென்றார்.

ரஷ்யாவில் 21வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் ‘ரவுண்டு–16’ போட்டியில் ‘நம்பர்–2’ அணியான நெய்மரின் பிரேசில் அணி, 15வது இடத்திலுள்ள மெக்சிகோவை சந்தித்தது. தொடர்ந்து 13வது முறையாக ‘ரவுண்டு–16’ போட்டியில் களமிறங்கிய பிரேசில் அணிக்கு, 5வது நிமிடத்தில் நெய்மர் வேகமாக அடித்த பந்தை மெக்சிகோ கோல் கீப்பர் கிலர்மோ ஓச்சா தடுத்து விட்டார்.

25 வது நிமிடம் கோல் போஸ்ட்டுக்கு மிக அருகில் சென்ற நெய்மர் அடித்த பந்து, மீண்டும் கிலர்மோவால் தடுக்கப்பட்டது. அடுத்த 7வது நிமிடம் 32வது நிமிடம் கோல் போஸ்டுக்கு 6 மீ., துாரத்தில் இருந்து பிரேசிலின் கேபிரியல் ஜீசஸ் கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோல் கீப்பர் கிலர்மோ கையில் பட்டு திரும்பியது. 39வது நிமிடம் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் நெய்மர் அடித்த பந்து கோல் போஸ்ட், வலது புறமாக சென்றது. முதல் பாதியில் 10 முறை முயற்சித்தும் பிரேசில் அணி கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

தோல்வி இல்லை: இரண்டாவது பாதியில் 51வது நிமிடம் வில்லியன் அடித்த பந்து கோல் கீப்பரை தாண்டி சென்றது. இதை அருகில் இருந்த ஜீசஸ் தவற விட, வாய்ப்புக்காக காத்திருந்த நெய்மர் பந்தை வலைக்குள் தள்ளி கோல் அடித்தார். பிரேசில் அணி 1–0 என முன்னிலை பெற்றது. நெய்மர் கோல் அடித்த போட்டிகளில் பிரேசில் தோற்றது இல்லை என்பதால், சக வீரர்கள் கூடுதல் வேகத்துடன் செயல்பட்டனர். 58வது நிமிடம் பிரேசில் வீரர் பவுலினோ அடித்த பந்து வேகமாக கோல் போஸ்ட் நோக்கிச் சென்றது. மீண்டும் ஒருமுறை கிலர்மோ இதை சிறப்பாக தடுத்த, இரண்டாவது கோல் வாய்ப்பு நழுவியது.

திடீர் அதிர்ச்சி: 71வது நிமிடம் மெக்சிகோவின் லாயுன் நெய்மரை ‘பவுல்’ செய்த, வலியால் துடித்தார். இதனால் 2014 தொடரைப் போல நெய்மர் பாதியில் வெ ளியேறி விடுவாரோ என ரசிகர்கள் பயந்தனர். நல்லவேளையாக சிகிச்சைக்குப் பின் மீண்டும் பந்தை நோக்கி பாய்ந்தார்.

போட்டியின் 88வது நிமிடம் மின்னல் வேகத்தில் பந்தை கொண்டு சென்ற நெய்மர், சக வீரர் பெர்மினோவிடம் ‘பாஸ்’ செய்தார். இதை அவர் அப்படியே கோலாக மாற்ற, பிரேசில் வெற்றி (2–0) உறுதியானது. முடிவில் பிரேசில் அணி 2–0 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

13 கோல்

கடைசியாக மோதிய ஐந்து உலக கோப்பை தொடர் போட்டிகளில் மெக்சிகோ அணிக்கு, பிரேசில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுத்தது இல்லை. அதேநேரம் 13 கோல் அடித்துள்ளனர்.

228 கோல்

உலக கோப்பை தொடர்களில் அதிக கோல் அடித்த அணிகளில் ஜெர்மனியை (21 தொடர், 226 கோல்) முந்தி, ‘நம்பர்–1’ அணியானது பிரேசில். இந்த அணி விளையாடிய 19 தொடர்களில் 228 கோல் அடித்தது.

6வது கோல்

ரஷ்யா தொடரில் நேற்று மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்த நெய்மர், உலக கோப்பை தொடரில் 38 முறை முயற்சி செய்து, 6வது கோல் பதிவு செய்தார். முன்னாள் வீரர்கள் ராபர்டோ ரிவலினோ (6), ரெபேட்டோ (6) கோல் எண்ணிக்கையை சமன் செய்தார்.

* அர்ஜென்டினாவின் மெஸ்சி 67, போர்ச்சுகலின் ரொனால்டோ 74 முயற்சிகளில் தான், முதல் 6 கோல் அடித்தனர்.

16வது முறை

உலக கோப்பை தொடரில் 21 முறையும் களமிறங்கியது அணி பிரேசில். நேற்றைய ‘ரவுண்டு–16’ போட்டியில் வென்ற இந்த அணி, 16வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.

20 கோல்

பிரேசில் அணிக்காக கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் நெய்மர் 20 கோல் அடித்தார். 11 கோல் அடிக்க சக வீரர்களுக்கு உதவியாக இருந்தார். ஒட்டுமொத்தமாக 89 போட்டியில் 57 கோல் அடித்த நெய்மர், 35 கோல் அடிக்க உதவினார்.

21 முறை

ரஷ்ய உலக கோப்பை தொடரில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மரை, ‘பவுல்’ செய்வதில் எதிரணிகள் அதிக அக்கறை காட்டுகின்றன. சமீபத்தில் தான் வலது கால் காயத்தில் இருந்து மீண்டார். தற்போது, நேற்று வரை 4 போட்டியில் விளையாடிய நெய்மரை, 21 முறை இடித்து தள்ளினர்.

24வது வெற்றி

இரு அணிகள் மோதிய 41 போட்டிகளில் பிரேசில் நேற்று 24வது வெற்றியை பதிவு செய்தது. 7ல் ‘டிரா’ செய்தது. 10ல் மெக்சிகோ வென்றது.

* உலக கோப்பை தொடரில் பிரேசில் அணி, 4வது வெற்றியை பதிவு செய்தது. ஒரு போட்டி ‘டிரா’ ஆக, மெக்சிகோ வெற்றிபெறவே இல்லை.

dinamalar.com

LEAVE A REPLY