FIFAவும் Lifeம்

0
217

(Mohamed Nizous)

உருகுவே வென்றிடுச்சு
உள் ரவ்ண்டுக்கு வந்திடுச்சு
ஆர்ஜண்டீனா போர்த்துக்கல்லு
ஆச்சரியமாய் தோத்திடுச்சே

ஜேர்மன் வெளியேற
மெஸ்ஸி அணி தோற்க
ஏதோ மாயம் அரங்கேறும்.
பெனால்டி அடிப்பதிலே
ரொணால்டோ தவற விட
பெரிதாய் அது பேசப் படும்
அரிதாய் அது நோக்கப் படும்.

ஒண்ணு ரெண்டு கோல்கள்
உலகம் எதிர் பார்க்க
ஆர்ஜண்டீனா பிரான்ஸ்கள்
ஏழு கோல்கள் போட
எதிர் பார்ப்புக் குறைய

ஒத்தையாளா ஜப்பான் அணி
உள்ளே நுழையும் ஆசியாவில்..
வெற்றி தோல்வி யாருக்கென்று
விளங்கலையே இத் தொடரில்

—-

முன்னால் சம்பியன்கள்
பின்னால் சம்பலாக
என்ன இங்கே நடக்குதென்று
எண்ணி ஆராய்வார்
பின்னர் அறிந்து கொள்வார்
எதுவும் உலகில் நிரந்தரமாய்
இல்லை என்று தெரிந்து கொள்வார்
இந்த வாழ்வை புரிந்து கொள்வார்

எதிர்ப்பார்ப்பு தோற்கும்
எதிர் அணி ஜெயிக்கும்
கோல்கள் சில நேரம்
குறுக்கால் கூட கிடைக்கும்
கூறும் விதியின் தீர்ப்பை.

இந்த முறை சம்பியன்கள்
அடுத்த முறை ஆரம்பத்தில்
தோல்வி கண்டு வெளியே செல்வார்
தொடரும் வாழ்வும் இப்படியே

LEAVE A REPLY