இலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்

0
72

(வாழைச்சேனை நிருபர்)

இலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள் என கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பிரதேச மீனவர் சங்கத்தின் பலநோக்கு கட்டடத்திற்கு அடிக்கல் நடும் விழா நேற்று முன்தினம் (29) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர் யுவதிகள் அனைவரும் அரசாங்க உத்தியோகத்திற்கு வருவதற்கே விரும்புகின்றனர். இலங்கையில் இளம் முயற்சியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றார்கள்.

எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையின் மூலம் தொழிலை விருத்தி செய்து வரி கட்டுபவர்களாக மாற வேண்டும். அரசாங்க திறைசேரியில் இருந்து பணங்களை பெற்று திட்டங்களை செய்வதாக இருந்தால் அரசாங்கத்திற்கு வரி வருமானம் தேவை.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளை பெற்று மக்கள் சிறந்த முறையில் தொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டும். அந்த தொழில் முயற்சியாளர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். அந்த வரிப்பணத்தின் மூலம் கஸ்டப்படும் மக்களுக்கு அரசாங்கத்தினால் உதவிகள் வழங்க முடியும். அவ்வாறு செயற்பட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார்.

LEAVE A REPLY