ஐ.எஸ்.சி T20 சாம்பியன் வெற்றிக் கிண்ண கடினபந்து கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டியில் கல்முனை இஸ்லாமாபாத் விளையாட்டுக் கழகம் வெற்றி

0
88

(நிப்ராஸ் மன்சூர்)

கல்முனை மாநகரின் ஐக்கிய சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.சி T20 சாம்பியன் வெற்றிக் கிண்ண கடினபந்து கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டி (25) கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும், இஸ்லாமாபாத் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலாவது துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜென்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் விளையாட்டு கழகத்தினர் 138 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியதில் 19.3 பந்து ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களை பெற்று அன்றைய போட்டியின் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.

கல்முனை இஸ்லாமாபாத் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எச்.எம் பஸ்மீர் தலைமையில் நடைபெற்றுவரும் ஐ.எஸ்.சி T20 சாம்பியன் வெற்றிக் கிண்ண போட்டிகளை கழகத்தின் ஆலோசகர் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பி.டீ ஜமால் ஆரம்பித்து வைத்ததுடன் பிரதம அதீதியாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிஃப் சம்சுதீனும் கலந்து சிறப்பித்தார்.

IMG-20180625-WA0077

 

LEAVE A REPLY