பொதுச் சுகாதாரம் சம்பந்தமான கலந்துரையாடல்

0
117

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் பொதுச் சுகாதாரம் சம்பந்தமான அவசியமும் அவசரமுமான கலந்துரையாடல் ஒன்றின் தேவை உணரப்பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம். தாரிக் தெரித்தார்.

துறைசார்ந்தவர்களின் பங்கு பற்றலுடன் இது விடயமான கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை 29.06.2018 காலை 8.30 மணிக்கு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மகப்பேற்று சிசு மரணங்கள், டெங்கு மற்றும் தடுப்பூசி, போஷ‪hக்கு, தாய் சேய் நலன், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்தக் கருத்தரங்கின் போது கலந்துரையால் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சௌக்கிய நலன்களையும் சமுதாய நலன்களையும் பேணிப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் துறைசார்ந்த வைத்திய நிபுணர்களும் பங்குபற்றவுள்ளனர்.

DSC06464

LEAVE A REPLY