காத்தான்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

0
109

(ஆதிப் அஹமட்)

தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா மற்றும் காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோர்களின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 15 விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள் கையளிப்பது தொடர்பிலான கழகங்களுடனான கலந்துரையாடல் இன்று (27) நகரசபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) இக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கின்ற நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளதோடு விஷேட அதிதியாக காத்தான்குடி நகர சபையின் உறுப்பினரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் உற்பட பல்வேறு முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

IMG_2252 IMG_2256

LEAVE A REPLY