(Photos) காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நடை பவணி

0
416

(விஷேட நிருபர்)

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நடை பவணி இன்று (27) புதன்கிழமை காலை இடம் பெற்றது.

“ஆரோக்கியமான மாணவர் சமூகத்தினை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொளில் காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த நடை பவணி இடம் பெற்றது.

இந்த நடை பவணியில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட், எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீன், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸத்தூரி ஆராச்சி, மௌலவி ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனீ பாடசாலை அதிபர் எம்.ஹக்கீம் உட்பட இப் பாடசாலையின் பழைய மாணவர்கள் முக்கியஸ்தர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

புhடசாலை முன்றில் இருந்து ஆரம்பமான இந்த நடை பவணி காத்தான்குடி பிரதான வீதி மற்றும் ஊர் வீதி வழியாக மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்தது.

இதன் போது போது இப்பாடசாலையில் கல்வி கற்று இன்று வைத்தியர்கள் பொறியியலாளர்கள், சட்டத்தாணிகள், பட்டதாரிகள்; போன்ற பல்வேறு துறைகளில் காணப்படுகின்ற பழைய மாணவர்களும் இப்பாடசாலையில் கல்வி கற்று உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நடை பவணியில் இப் பாடசாலை மாணவர்களினால் இஸ்லாமிய கலாசார பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையிலான நிகழிவுகளும் இடம் பெற்றன.

காத்தான்குடி பிரதேசத்தில் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட ஒரு ஆண் பாடசாலையாக காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயம் காணப்படுகின்றது.

இப்பாடசாலை கல்வி மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் அன்மைக்காலமாக பல முன்னேற்றங்களை அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSCN1828 DSCN1830 DSCN1835 DSCN1839 DSCN1811 DSCN1815 DSCN1816 DSCN1818 DSCN1819 DSCN1825 DSCN1826

LEAVE A REPLY