மரதங்கடவெலயில் வாகன விபத்து: பாடசாலை மாணவன் பலி

0
121

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை ஏ12 பிரதான வீதி ஹொரவ்பொத்தான மரதங்கடவெல பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் படுகாயமடைந்த கபுகொள்ளாவ துனுவத்தேகம பகுதியைச் சேர்ந்த பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவனான ஹசித டில்சான் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பின் புரமாக பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்

உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி விபத்துடன் தொடர்புடைய சாரதியை எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (27) கெப்பித்திகொள்ளாவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் வவுனியா, மகா இறம்பைக்குளம் ஜந்தாம் குருக்குத் தெருவைச் சேர்ந்த வசந்த ராஜா பவித்ரன் (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

FB_IMG_1530108325972

LEAVE A REPLY