காத்தான்குடி மாணவன் ஜெஷுலி அகமட் நேபாளத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டில் பங்கேற்பு

0
666

(விஷேட நிருபர்)

காத்தான்குடி 4ம் குறிச்சி உமர்தீன் வீதியைச் சேர்ந்த முகம்மட் மாஹீர் ஜெஷுலி அகமட் எனும் மாணவன் நேபாளத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இவர் கடந்த திங்கட்கிழமை (25.6.2018) நேபாளம் பயணமானார்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஏற்பாட்டில் தெற்காசிய பிராந்திய இளைஞர்களுக்கான இந்த மாநாட்டில் இலங்கைப்பிரதி நிதியாக இவர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த மாநாடு நேபாளம் நாட்டின் கார்ட்மண்டுவில் 26.6.2018 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 28.6.2018 வியாழக்கிழமை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இளைஞர்களின் இயலுமை விருத்தி, திறன் விருத்தி, திட்டமிடல், தலைமைத்துவம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமர்வுகள் இடம் பெறுகின்றன.

காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர கணிதப் பிரிவில் கல்வி கற்கும் இம் மாணவர் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையில் 9 பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றிருந்தார்.

இலங்கை மின்சார சபையின் மின் அத்தியட்சகரும் காத்தான்குடி ஸெயின் மௌலானா பள்ளிவாயலின் செயலாளருமான பொறியியலாளர் ஏ.எல்.மாஹீர் அமானா முன் பள்ளி பாடசாலையின் ஆசிரியையான ஜெஸ்மின் பானு ஆகியோரின் புதல்வாரன மேற்படி ஜெஷுலி அகமட் ஆங்கில மொழியில் தேர்ச்சியானவர்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஏற்பாட்டில் அதன் தெற்காசிய பிரதி நிதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு நிகழ்வொன்றுக்காக வருகை தந்த போது இந்த மாணவரை குறித்த மாநாட்டிற்காக தெரிவு செய்தனர்.

இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து மேற்படி ஜெஷுலி அகமட் உட்பட இருவர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

36241069_2165753600309852_1356876479153045504_o 36292046_2165753823643163_7678503761119019008_o

LEAVE A REPLY