எழுச்சிக் கிராம கையளிப்பையொட்டி கண்பார்வை இலவச பரிசோதனையும் கண்ணாடிகள் விநியோகமும்

0
128

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூரில் எழுச்சிக் கிராமம் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி சுமார் 300 பேருக்கு இலவசமாகக் கண் பரிசோதனை செய்து இலவசமாக கண்ணாடிகள் வழங்கும் கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.

வீட்மைப்பு நிருமாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் நகர்ப்புற தீர்வு அபிவிருத்தி அதிகார சபையின் சமூகநலத் தயாரிப்புப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள (Organised by Social Mobilization unit under the Urban settlement Development Authority Ministry of Housing and Construction) இந்த வைத்திய முகாமில் சமூக அபிவிருத்தி உதவியாளர் நாலக ஜயசேகர, கண்பரிசோதனை நிபுணர் வி. தருமலிங்கம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளான ஜயபாமினி புஸ்பநாதன், என்.எம். தாஜுன், இஷற். ஹுஸைன், டி. திவாகரன், ஏ. பார்த்தீபன், ஜி. விராஜி ரங்கிகா, கே.ஜி. மலிந்தா, செவ்வந்தி வனமாலி உட்பட இன்னும் பல அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.‪

ஏறாவூர் அல்முனீறா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்த பரிசோதனை முகாமில் பார்வைக் குறைபாடுள்ள சுமார் 300 பேர் தமது கண்களைப் பரிசோதித்ததுடன் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுச்சிக் கிராம கையளிப்பு நிகழ்வில் கண்ணாடிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது.

DSC06275 DSC06313

LEAVE A REPLY