இரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் ஜவர் கைது

0
108

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட 02ம் வாய்க்கால் மற்றும் பம்மதவாச்சி பகுதிகளில் இரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் ஜந்து பேரை நேற்று (24) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மறை இறைச்சி கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 02ம் வாய்க்கால் ஊடாக நடந்து வந்து கொண்டிருந்தவரை விசாரணை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ மறை இறைச்சி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட இறைச்சி மொறவெவ 01ம் வாய்க்கால் பகுதியைச்சேர்ந்த பாஸ்கரன் யோகேஸ்வரன் (35வயது) என்பவருடையது எனவும் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மம்மதவாச்சி ஆலங்குளம் காட்டுப்பகுதியில் அனுமதிப்பத்திரத்தின் சட்டங்களை மீறி மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு உழவு இயந்திரங்களையும் நான்கு பேரையும் கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை கன்னியா மற்றும் ஆனந்தபுரி பகுதிகளைச்சேர்ந்த 41 வயது மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY